உம்மை நம்புவேன்
ummai nambuven
உம்மை நம்புவேன் முழுவதுமாய் உம்மை ஆராதிப்பேன் முழு பெலத்தால்-2
உடைக்கப்பட்ட என்னையும் காயப்பட்ட என்னையும் தேடி வந்தீரே நன்றி ஐயா-2
இரத்தத்தினாலே கழுவிவிட்டீர் கிருபையினாலே சேர்த்துக்கொண்டீர்-2 உம் மகனாக என்னை மாற்றிவிட்டீர் உம் அன்பினாலே என்னை கவர்ந்து கொண்டீர்-2-உம்மை நம்புவேன்
உலகம் என்னை வெறுத்தாலும் நம்பினோர் என்னை கைவிட்டாலும்-2 கல்வாரி(உங்க) அன்பு ஒரு போதும் மாறாதது தேடி வந்தீரே எனக்காகவே -2 சேர்த்துக்கொண்டீரே என்னையுமே-உம்மை நம்புவேன்
மனிதர்களாலே உடைக்கப்பட்டேன் சொல் அடியினால் நொறுக்கப்பட்டேன்-2 என்னை மீண்டும் கிருபையால் உயர்த்தினீரே உபயோகமாகவே மாற்றினீரே-2 நன்றி நன்றி உமக்கு தானே-உம்மை நம்புவேன்