உம்மை நம்புவேன்
ummai nambuven
உம்மை நம்புவேன் உள்ளளவுமாய் எனக்காக மரித்தீரே பாவம் போக்கினீர் சாபம் நீக்கினீர் காயங்களால் குணமாக்கினீர்
துதித்திடுவேன் துன்ப வேளையில் மகிழ்ந்திருப்பேன் உம்மிலே அதிகாலையில் உம்மை தேடிடுவேன் உண்மையாய் உயர்த்துவேன்
அமர்ந்திருப்பேன் உம் பாதத்திலே கஷ்டத்தின் மத்தியிலும் உந்தனின் மகிமை என் மேல் உதித்திடும் எழும்பி பிரகாசிப்பேன்
ஜீவநாளெல்லாம் உம்மை தேடுவேன் ஜீவன் தந்த என் இயேசுவே தேவைகள் பல நெருக்கினாலும் தெரிந்தவர் நீரல்லோ