உம்மை நம்பி யாரும் மாண்டதில்லை
ummai nambi yaarum maandadhillai
உம்மை நம்பி யாரும் மாண்டதில்லை மாண்டதில்லை மாண்டதில்லை
1. துன்பங்கள் பலமாய் நெருங்கி வந்தாலும் தொல்லைகள் என்னை அணுகி வந்தாலும் காக்க வல்லவர் காக்க வல்லவர் காக்க வல்லவர் காக்க வல்லவர் – (உம்மை)
2. சிங்கத்தின் குட்டிகள் தாழ்சியுற்றாலும் பங்கம் வராதென்னைக் காத்திடுவீரே ஓங்குவீர் பெலன் ஓங்குவீர் என்னை தாங்குவீர் துயர் நீக்குவீர் (உம்மை)
3. நிறுத்திடுவீர் என்னை களங்கமில்லாமல் பொறுத்து என் குறைகள் யாவையும் அகற்றி காப்பீரே என்னை காப்பீரே சுத்தம் செய்வீரே முக்தி சேர்ப்பீரே – (உம்மை)
4. தாரகைப் போல் இலங்கின சுத்தர் பாதை விட்டோடி மறந்து விட்டாலும் பாதைக்காட்டவும் பாதுகாக்கவும் பாதம் சேர்க்கவும் வல்லவர் – (உம்மை)
5. மாட்சியிலே இன்றும் வந்திடுவீரே மகிமையிலே என்னை சேர்த்துக் கொள்வீரே மன்னவர் நீரே வல்லவர் இன்றும் நல்லவர் என்றும் நல்லவர் – (உம்மை)