உம்மை நான் பார்க்கனும்
ummai naan paarkkanum
உம்மை நான் பார்க்கனும் உம் சத்தம் கேட்கனும்" நீங்க என்னத் தொடனும் அதை நான் உணரனும்
ஏங்குகிறேன் ஐயா நான் ஏங்குகிறேன் ஓ.... ஏங்குகிறேன் உந்தன் அன்பிற்காய். தவிக்கின்றேன உந்தன் அனபிற்காய் தெய்வமே ஏங்குகிறேன். உமக்காய் ஏங்குகிறேன் ஓ.....
ஏங்குகிறேன் உந்தன் அன்பிற்காய் தவிக்கின்றேன் உந்தன் அன்பிற்காய் இந்த உலகம் எனக்கு வேண்டாமய்யா உங்க அன்பு மட்டும் போதும் இயேசய்யா என் உசுரு நிங்கப்பா என் நினைவும் நீங்கப்பா என் தாகம் நீங்கப்பா எனக்கெல்லாம் நீங்கப்பா
நான் கலங்கும் போது எனக்காக கலங்குறீங்க நான் துடிக்கும் போது எனக்காக துடிக்குறீங்க (2) நான் அழுகும் போது எனக்காக அழுகுறீங்க (2) உங்கள போல நல்ல நேசர் யாரும் இல்லப்பா உங்கள விட்டு எனக்கு வேறு கதி இல்லப்பா
நான் நேசித்தோர் என்னை வெறுக்கையிலே என்னை தேற்றின தெய்வம் நீங்கதானப்பா நான் நம்பினோர் என்னை கைவிடுகையிலே (2) உங்க கரம்தானே என்னை தாங்கினதே உங்க அன்பை எண்ணி எந்த நாளும் பாடுவேனே