உம்மை நான் மறந்த
ummai naan marandha
உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2
நான் உம்மை மறந்தாலும் நீர் என்னை மறக்கலையே தூரமாய் சென்றாலும் உம் கிருபை விலகலையே-2
1.கடினமான பாதைகளில் கரம் பிடித்தீர் சோர்ந்து நான் விழுந்த நேரம் தூக்கி சுமந்தீர்-2
யார் என்னை மறந்தாலும் நீர் என்னை மறக்கலயே துரோகியாய் இருந்தாலும் உம் அன்பு குறையலையே-2
2.இருள் சூழ்ந்த நேரங்களில் வெளிச்சமானீர் மரணத்தின் பள்ளத்தாக்கில் ஜீவனானீர்-2
முடிந்த என் வாழ்க்கையை மீண்டும் துவக்கினீர் தோல்வியின் நாட்களை ஜெயமாய் மாற்றினீர்-2