உம்மை அல்லால் ஒன்றும்
ummai allaal ondrum
உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் உதவிடும் என் தெய்வமே உந்தன் கையில் ஆயுதமாக உபயோகியும் இயேசையா
நேசரே உம் நேசம் போதும் இயேசுவே உம் பாசம் போதும் அன்பரே உம் மகிமை காண ஆண்டவா நான் ஓடி வந்தேன்
நீரே திராட்சை செடி நாங்கள் உம் கொடிகள் உம்மில் நிலைத்திருந்து மிகுந்த கனி கொடுப்போம்
நீரே நல்ல மேய்ப்பன் நான் உந்தன் ஆட்டுகுட்டி உம் தோளில் தான் இருப்பேன் எங்கும் பின் சென்றிடுவேன்
நீரே என் தகப்பன் நான் உந்தன் செல்லப்பிள்ளை கீழ்படிந்து நடந்திடுவேன் காலமெல்லாம் மகிழ செய்வேன்