உம்மாலன்றி என்னால் என்ன
ummaalandri ennaal enna
உம்மாலன்றி என்னால் என்ன முடியும் உம் துணையின்றி யாரால் வாழ முடியும் பெலவீனங்கள் நீங்கி பெலவானாய் மாற உம் ஆவியினால் என்னை அபிஷேகியும் பெலவீனங்கள் நீங்கி பெலவானாய் மாற உம் அக்கினியால் இன்றே அபிஷேகியும்
இயேசுவே என் இயேசுவே இயேசுவே எந்தன் இயேசுவே
கண்மணிபோல என்னைக் காக்கும் தேவா காலமெல்லாம் உடனிருக்கும் நாதா பாவங்கள் நீங்கிட சாபங்கள் தொலைந்திட உம் பாதம் இன்றே நான் சரணடைந்தேன் பாவங்கள் நீங்கிட சாபங்கள் தொலைந்திட உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
சாத்தானின் சதிகள் தினமும் வென்றிட தூயோனாய் உம்மில் என்றும் வாழ்ந்திட கர்த்தர் என் மேய்ப்பர் குறை ஒன்றுமில்லை புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர் கர்த்தர் என் மேய்ப்பர் குறை ஒன்றுமில்லை அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்