உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்
ummaalae oru senaikkul paayven
உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன் உம்மாலே ஒரு மதிலை தாண்டுவேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
செங்கடல் எதிராய் எதிர்த்து வந்தாலும் எரிகோ கோட்டை எதிரே வந்தாலும் துணிந்து சொல்வேன் துணையாய் இயேசு என்றென்றும் காத்திடுவார்
யோர்தான் நதியைக் கடக்க சென்றாலும் பள்ளத்தாக்கினை பார்த்து நின்றாலும் துணிந்து சொல்வேன் துணையாய் இயேசு என்றென்றும் காத்திடுவார்
அக்கினி சூளையில் எரிக்க நேர்ந்தாலும் காட்டு வழியினை கடக்க சென்றாலும் துணிந்து செல்வேன் துணையாய் இயேசு என்றென்றும் காத்திடுவார்