உம்மாலே அன்றி ரட்சகா பேர்
ummaalae andri ratsagaa per
1. உம்மாலே அன்றி ரட்சகா பேர் நன்மை காண்கிலேன் மெய்ச் சமாதானம் இன்பமும் வேறெங்கும் பெற்றிலேன்.
பல்லவி
வேறொன்றினாலும் ரட்சகா! மெய்க் பாக்கியம் அடையேன் உம்மாலே தான் என் ஆண்டவா! சுந்தோஷமாகிறேன்.
2. பேரன்பை உணராமலே மெய் பாக்யம் நாடினேன் நான் ஆவலோடே தேடியும் ஏமாறிப் போயினேன்.
பல்லவி
வேறொன்றினாலும் ரட்சகா! மெய்க் பாக்கியம் அடையேன் உம்மாலே தான் என் ஆண்டவா! சுந்தோஷமாகிறேன்.
3. பூலோகப் பொருள் இன்பத்தைப் பின்பற்றி நம்பினேன் சற்றேனும் அற்ப வாழ்வினால் நான் திருப்தி ஆகிலேன்.
பல்லவி
வேறொன்றினாலும் ரட்சகா! மெய்க் பாக்கியம் அடையேன் உம்மாலே தான் என் ஆண்டவா! சுந்தோஷமாகிறேன்.
4. இப்போதோ உந்தன் ரட்சிப்பைக் கண்டிளைப்பாறினேன் ஆனந்தம் பொங்கி இன்பமாய் நான் போற்றி பாடுவேன்.