உம்மால் தானே ஐயா
ummaal thaanae aiyaa
உம்மாலே தானே ஐயா நான் உயிர் வாழ்கிறேனையா என்னாலே ஒன்றும் ஆகாதையா எல்லாமே உம்மால் ஆகும் ஐயா
ஆவியானவரே ஆவியானவரே - 2
தேற்றரவாளன் நீரே என்னைத் தேற்றிட வாருமையா சத்திய ஆவியினால் என் உள்ளத்தை நிரப்புமையா - 2
அற்புதம் செய்பவரே - - என் அதிசயமானவரே உம் அபிஷேக வல்லமையால் என்னை நிரப்பிட வாருமையா
என் வாழ்வை அறிந்தவரே கண்ணோக்கிப் பாருமையா என் ஆவியானவரே - உம் அக்கினியை ஊற்றுமையா