உமக்கு சமானம்
umakku samaanam
உமக்கு சமானம் இல்லையே (2) வானம் விரிக்கத்தக்க பூமி படைக்கத்தக்க வேறொருவர் இல்லையே - சமானம் இல்லையே
எந்த சாயலுக்கும் உம்மை ஒப்பாக்கி பசும்பொன்னினாலே உம்மை செய்ய கூடுமோ??? வானமோ உமது சிங்காசனம் பூமியோ உமது பாதபடி - சமானம் இல்லையே
தாயின் கருவிலே என்னை ஏந்திக்கொண்டு உம் கரத்தால் தினமும் தாங்கி கொண்டீர் என் நரைவயதில் என்னை காப்பவரே என் முதிர்வயதில் என்னை சுமப்பவரே - சமானம் இல்லையே