உமக்காகவே பலன் கொடுக்க
umakkaagavae palan kodukka
பல்லவி
உமக்காகவே பலன் கொடுக்க விதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் - 2
நீ வழியின் விதையோ, கற்பாறையின் விதையோ நீ முள்ளின் விதையோ, நல்ல நிலத்தின் விதையோ - 2 நான் அவருக்காய் பலன் தரும் விதையே என் இயேசுவுக்காய் பலன் தரும் விதையே - 2
1. வழியருகே விதைக்கப்பட்டோம், வசனத்தைக் கேள்விப்பட்டோம் சாத்தானுக்கு செவிகொடுத்து, வசனத்தில் விலகிப்போனோம். - 2
நீ வழியின் விதையே, உன்னில் பலனில்லையே -4 நீ அவருக்காய் பலன் தரவில்லையே, என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே -2
2. பாறையிலே விதைக்கப்பட்டோம், சந்தோசமாய் வசனத்தை ஏற்றோம், கொஞ்சக்காலம் நிலைத்திருந்து, பின்னாலே பின்வாங்கிப்போனோம்- 2
நீ பாறையின் விதையே, உன்னில் பலனில்லையே -4 நீ அவருக்காய் பலன் தரவில்லையே, என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே -2
3. முள்ளின்மேல் விதைக்கப்பட்டோம், வசனத்தைக் கேட்டுக்கொண்டோம் உலகக்கவலை ஐசுவர்யத்தின், மயக்கத்தால் பலனற்றுப்போனோம்.-2
நீ முள்ளின் விதையே,உன்னில் பலனில்லையே -4 நீ அவருக்காய் பலன் தரவில்லையே, என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே -2
4. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டோம், வசனத்தைக்கேட்டு உணர்ந்தோம், இதயத்தில் காத்துகொண்டு, பலமடங்காய் பலன் கொடுப்போம். - 2
நல்ல நிலத்தின் விதையே, நான் பலன் தருவேனே - 4 நான் முப்பதும் அருபதும் நூறாய் பலன் தருவேன் - 4
பல்லவி
உமக்காகவே பலன் கொடுக்க விதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் - 2