உமது சேவை எமது இன்பம்
umadhu sevai emadhu inbam
உமது சேவை எமது இன்பம் அயர்ந்திடாது செய்திடுவோம் ஆத்தும பாரமும் ஆவியின் நிறைவும் தங்கிட நாமும் செய்குவோம்
பாவத்தில் மாளும் மாந்தார் குரலை அழுகை தொனியில் அபல நிலையை உணர்ந்தே எழும்பி விரைந்திடுவோம் சேவை செய்ய புறப்படுவோம்
ஆறுதல் அளிக்கும் வார்த்தை கூறி ஆத்தும ஆதாயம் செய்ய துணிவோம் தனியாள் ஊழியம் அனுதினம் செய்வோம் கருத்துடன் ஊழியம் செய்குவோம்
காடு மலையோ கிராமம் அனைத்தும் விரைந்து சென்று சேவை புரிவோம் உயர்த்தி இயேசுவை உலகினில் நாமே நற்செய்தி எங்குமே சாற்றிடுவோம்
பாரத்தால் நாமே அழுது ஜெபித்து அழியும் மனுவை வழியில் திருப்பி சபையில் என்றும் நிலைத்திட செய்வோம் பொறுப்புடன் ஊழியம் செய்திடுவோம்
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm C# C7 C# Eb G# C# Eb C7 Fm Fm C# C C7 A#m C Fm F A# C# Fm A#m C7 Fm Fm C# C C7 A#m C Fm F A# C# Fm A#m C7 Fm Fm C# C C7 A#m C Fm F A# C# Fm A#m C7 Fm Fm C# C C7 A#m C Fm F A# C# Fm A#m C7 Fm