உமதன்பில் உலகமே மறந்து போகுதே
umadhanbil ulagamae marandhu pogudhae
உமதன்பில் உலகமே மறந்து போகுதே உயிரிலும் உமதன்பு கலந்து போனதே உமதன்பை தினம் நினைக்கையில் மனம் துள்ளி துள்ளி கொண்டாடி மகிழும் _(உமதன்பில்
எந்தன் மனம் உம்மோடு இருக்கும் உந்தன் மனம் என்னோடு இருக்கும் உம் அன்பை பருக ஓடோடி வருவேன் உம் நேச மழையில் நாள்தோறும் நனைவேன் உம்மைச்சுற்றியே என் சிந்தை சுழலும் உம்மைப்பற்றியே சொல்லும் என் நிழலும் _2 என் ஜீவ ஊற்றும் நீர் என் சுவாச காற்றும் நீர்.
உம்மை எந்தன் நெஞ்சோடு பதித்தேன் என்னை முற்றும்-உம் கையில் கொடுத்தேன் உம் வார்த்தை சுவைத்தேன் உம்மை நான் ருசித்தேன் உம்மாலே பிழைத்தேன் உம்மைப்போல் தழைத்தேன் இராப்பகலாய் உம்மை நான் தியானித்தேன் என் இயேசுவே உம் அன்பில் நிலைத்தேன் _2 உம் அன்பு மலைத்தேன் உம் அன்பில் மலைத்தேன்