உம் வல்லமையை தாரும்
um vallamaiyai thaarum
உம் வல்லமையை தாரும் தேவா உம் அக்கினியை ஊற்றும் தேவா உன்னத பெலத்தினாலே நிரப்பும் தேவா உந்தனின் மகிமையாலே ஊற்றும் தேவா -(2)
1. பாவத்தின் கட்டுகள் சாத்தானின் கட்டுகள் இன்றே உடையட்டுமே தேவா வியாதி கட்டுகள் கடனின் பாரங்கள் இன்றே மாறட்டும் என் தேவா -(2) பரலோக அக்கினியை ஊற்றுங்க பரிசுத்த அக்கினியை ஊற்றுங்க -(2)
2. சபைகள் மாறணும் உமக்காய் எழும்பணும் செயல்பட தொடங்கணுமே தேவா பரிசுத்தம் ஆகணும் உமக்காய் ஓடணும் ஊழியம் செய்யணும் என் தேவா -(2) பரலோக அக்கினியை ஊற்றுங்க பரிசுத்த அக்கினியை ஊற்றுங்க -(2)
3. அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் வாழ்ந்த வாழ்க்கை வேண்டாம் தேவா வறண்ட நிலத்திலே ஆவியை ஊற்றுமே உமக்காய் எழும்பணுமே தேவா -(2) பரலோக அக்கினியை ஊற்றுங்க பரிசுத்த அக்கினியை ஊற்றுங்க -(2)