உம் சித்தமே என் வாழ்வாக வேண்டும்
um sithamae en vaazhvaaga vendum
உம் சித்தமே என் வாழ்வாக வேண்டும் இறைவா உம் வார்த்தை ஒளியாக வேண்டும் உம் சித்தயே - 3
ஒருநாள் விடிவதும் முடிவதுமே உம் சித்தமே உயிர்கள் பிறப்பதும் இறப்பதுமே உம் சித்தம் உறவுகள் மலர்வதும் மடிவதமே உம் சித்தமே உலகின் இருத்தலும் இயக்கமுமே உம் சித்தமே ஏராளமான நேசத்துடன் எம்மைக் காத்திர் உம் சித்தமே
வாழ்வினில் வறுமையும் வளமையுமே உம் சித்தமே வாழ்வினில் துன்பமும் துயரமுமே உம் சித்தமே நான்மைகள் தீமைகள் நிகழ்வதுமே உம் சித்தமே நானிலம் வளர்வதும் வாழ்வதுமே உம் சித்தமே மாறாத உந்தன் நேசத்தினால் எம்மை மீட்டீர் உம் சித்தமே