உம் சித்தம் இயேசுவே
um sitham yesuvae
உம் சித்தம் இயேசுவே நான் ஓர் மண் பாண்டமே உத்தம ஜீவியாய் உயர்த்த வேண்டுமே
நித்தம் என் பந்தயம் சத்திய சிலுவையே சித்தம் அறிந்துயான் செய்திட வேண்டுமே
1. அலகையின் ஆஸ்தியும் உலகின் சம்பாத்தியமும் ஒர் நாளில் தூசியாய் ஒழிந்தே போய்விடும் அந்தர வானமும் அகில பூமியும் வெந்து உருகிப்போம் நீர் வரும் நாளிலே
2. உற்றார் உறவினர் மற்றுள்ளோர் யாவரும் மருள வைத்தென்னை வெருள விரட்டினும் அருளே என் தாபரம் ஆண்டவரின் கரம் அணைத்தெடுத்து தம் அண்டையில் சேர்க்குமே
3. உயர்வான கல்வியும் உத்தியோகப் பட்டமும் உலகத்தின் ஞானமும் என்னோடு சேருமோ மரணத்தின் கூடவே மறைந்தே போகுமே என்னோடு சேர்வதென் பாவமும் புண்யமே
4. பெலவீன பாவிநான் சுகவீன தேகிநான் உலகத்தின் மாயையில் அணைந்தழியாமல் உந்தன் வருகையில் உம்மை நான் சந்திக்க என்னை நடத்துவீர் என் இயேசு தேவனே