உம் சித்தம் செய்ய நான்
um sitham seyya naan
1. உம் சித்தம் செய்ய நான் வருகின்றேன் உலகில்" என்ற என் நேசரை போல் உவந்தே என்னையும் அர்ப்பணித்தேன் உன்னதரின் சித்தம் செய்திடுவேன்
இயேசுவே உம் திரு சித்தமே என்னில் முற்றுமாய் நிறைவேற்றும் ஒப்புவித்தேன் உம் கரத்தில் ஏற்றென்னை நடதடதிடும்
2. தம் திரு சிந்தையில் வரைந்த தாம் தற்பரன் திரு சித்தமதை ஆயத்தம் செய்த என் தேகமதில் ஆதரையில் யானும் செய்திடுவேன் - இயேசு
3. ஆவியை ஈந்தவர் ஆலயமாய் ஆக்கியதாம் எந்தன் காயமதில் பரிசுத்தமானதை பூரணமாய் . பயத்துடன் நிறைவேற்றிடுவோம் - இயேசு
4. பாரினில் பாவம் விட்டோய்ந்தவனாய் பாடுகளின் சிந்தை தரித்தோனாய் முன்னோடியாய் சென்ற இயேசுவின் நல் திருவடிகளை பின் தொடர்வேன் - இயேசு
5. ஜீவனாம் கிறிஸ்து வரும் நாளில் ஜீவன் வைத்தே சித்தம் செய்தோரின் ஜீவன் ஆளுகை செய்திடவே ஜீவபலியாய் படைக்கின்றேன் யான் - இயேசு