உம் சித்தம் போல் என்னை
um sitham pol ennai
உம் சித்தம் போல் என்னை என்றும் தற்பரனே நீர் நடத்தும் என் சித்தமோ ஒன்றும் வேண்டாம் என் பிரியமே என் இயேசுவே
1. வழிப்பிரயாணி முடனைப் போல் வழித்தவறா நடந்திடவே - 2 வழி இதுவே என்று சொல்லும் இனிய சத்தம் தொனித்திடட்டும் -4
2. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன் மறு பிரயாண காலம் வரை -2 பரனே உந்தன் திரு சித்தத்தை அறிவதல்லோ தூய வழி - 4
3. அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் அடியாரின் மேல் ஜொலித்திடட்டும் - 2 இரவு பகல் கூட நின்று என்றென்றுமாய் நடத்திடுமே -4
4. எண்ணிடேன் நான் யாதொன்றையும் புண்ணியர் தேசம் காணும் வரை - 2 பரதேசியாய் சஞ்சரிப்பேன் பாரம் என்னைத் தாக்கிடாமல் -4
5. இடுக்கமே என் அப்பமுமாய் கண்ணீரோ என் தண்ணீருமாய் பருகிடினும் பயப்படேன் நான் என்றென்றுமே சித்தம் போதும்