உம் சித்தம் தேவா நடப்பியும்
um sitham devaa nadappiyum
1. உம் சித்தம் தேவா என் பாக்கியம் குயவன் நீர்தாமே களிமண் நானே உம் சித்தம் போலே ஆக்கும் என்னை ஒப்புவித்தேனே பூரணமாய்
2. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே என் இதயத்தை ஆராயுமே உம் சமூகத்தில் தாழ்ந்திருக்கும் என்னைக் கழுவிச் சுத்தம் செய்யும்
3. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே நோக்குமே எந்தன் காயங்களை எல்லாம் வல்ல என் ஆண்டவரே என்னைத் தொட்டுக் குணப்படுத்தும்
4. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே முற்றிலும் என்னை ஆட்கொள்ளுமே கிறிஸ்துவை என்னில் நான் காட்டவும் என்னை உம் ஆவியால் நிரப்பும்!