உம் சன்னிதி கதி என் இயேசுவே
um sannidhi kadhi en yesuvae
உம் சன்னிதி கதி என் இயேசுவே உம் பிரசன்னம் தாருமே எந்தனுக்கே மண் துக்கங்களிலும் விண் சன்னிதி கதி நீர் நிம்மதி தாரும் இன்றும் என்றும்
பூமி அகன்றிடினும் சமுத்திரம் நிலை மாறி மலைகளும் சாய்ந்திட்டாலும் திருப்பாதம் போற்றி ஓம் சன்னிதி நாடுவேன் உம் கிருபாவரம் தாரும் இன்றும் என்றும்
துரோகத்தால் மானிடர் பேசினாலும் சோகத்தால் என் உள்ளம் வாடினாலும் திருப்பாதம் போதும் உம் சன்னிதி நாடுவேன் உம் கிருபாவரம் தாரும் இன்றும் என்றும்