உம் சமூகம் வரும்போதெல்லாம்
um samoogam varumbodhellaam
உம் சமூகம் வரும்போதெல்லாம் எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது (2) உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி உமது சமூகத்தில் பேரானந்தம் ஒரு நாளும் மாறாதையா ஒரு நாளும் ஒரு போதும் மாறாது, மாறாது உம் சமூகமே, உம் சமூகமே!
1. மேற்கிலும் கிழக்கிலும், வடக்கிலும் தெற்கிலும் அலைந்து நான் திரிந்தாலும் விடுதலை இல்லையே! நித்திய ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடமுண்டு (2) உமது வார்த்தையால் திருப்தி ஆகிறேன் (2)
2. பன்னிரெண்டு வருடமாய் பெரும் பாடுள்ள ஒரு பெண் அநேக வைத்தியரால் கைவிடப்பட்டவளாய் இயேசுவின் சமூகத்திற்கு ஓடோடி வந்தாளே இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டதால் சுகமானாள்!
3. இஸ்ரவேலின் சேனைகள் முன்னே கடந்திட்ட தேவ சமூகம் ஒருவரும் பெலவீனராய் இருந்ததும் இல்லையே! இரவினில் அக்கினி ஸ்தம்பம் பகலில் மேகஸ்தம்பம் பாதுகாத்து நடத்தினீரே சேனைகளின் தெய்வமே!