உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன்
um pirasannam vaanjikkiren
உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் சந்ததம் ஈந்திடுமே தகுதியற்ற பாத்திரம் நான் கிருபையால் வனைந்திடுமே
கேருபீன்கள் சேராபீன்கள் உயர்த்திடும் பரிசுத்தரே ஸ்வாசமுள்ளோர் பணிந்து போற்றும் மகிமைக்கு பாத்திரரே
ஆராதனை ஆராதனை தூயாதி தூயவரே ஆ ஆ ஆ... அல்லேலூயா அல்லேலூயா பெலனே என் கன்மலையே (2)
மகிமையின் மேகம் மகிமையின் மேகம் ஸ்தலத்தின்மேல் அசைவாடுமே சுயம் எண்ணில் சாய அனலாய் எழும்ப உம் ஆவியால் உயிர்ப்பியுமே (2)
ஓ ஓ ஓ... பனி போல உம் பிரசன்னம் என்னை நிரப்பிடுமே ஆ ஆ ஆ... அக்கினியின் நாவுகள் என்மேல் அமர்ந்திடுமே (ஆராதனை)