உம் நாமம் உயர்த்த
um naamam uyartha
உம் நாமம் உயர்த்த உம்மையே துதிக்க இந்த ஓர்நாவுபோதாதையா உம் அன்பைபாட ஓய்வின்றி போற்ற இந்த ஓர்ஜீவியம் போதாதையா
ஆயிரம் நாவுகள் வேண்டும் ஆயிரம் ஜீவியம் வேண்டும் ஆனாலும் நீர் செய்த நன்மைகள் விவரித்து சொல்ல இயலாதே
தாயின் கருவில் கண்டவரே தயவாய் இதுவரை சுமந்தவரே தகப்பனின் மேலாய் காப்பவரே தரணியில் உமக்கு நிகருமுண்டோ
பாவங்கள் சுமந்த பரிசுத்தரே பரிகார பலியாய் மரித்தவரே ஜீவனுள்ளோரில் முதற்பேறானவர் ஜீவனில் உமக்கு நிகரு முண்டோ
வாக்குத்தத்தங்கள் தந்தவரே வாக்கை நிறைவேற்ற வல்லவரே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் வார்த்தையில் உமக்கு நிகருமுண்டோ
வாசஸ்தலம் உண்டு என்றவரே எனக்காய் மீண்டும் வருபவரே மாரநாதா வேகம் வருவீரே பரலோகத்தில் உமக்கு நிகருமுண்டோ