உம் நாமம் சொல்ல சொல்ல
um naamam solla solla
உம் நாமம் சொல்ல சொல்ல என் உள்ளம் மகிழுதையா -2 உம்மையன்றி யாருமில்லை எனக்கு -4
மலைகள் விலகினாலும் பர்வதம் அகன்று போனாலும் -2 உம் வார்த்தை மாறிவிடாதே -2 உம் அன்பு என்னைவிட்டு விலகாதே ஓஓ உம் கிருபை என்னை விட்டுப் பிரியாதே -2
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசுவே -2
உலகம் என்னை மறந்தாலும் உறவினர் என்னை வெறுத்தாலும் -2 உம் சமூகம் மறந்திடாதே -2 நீர் என்னை என்றும் மறப்பதில்லை ஓஓ -2
இயேசு நல்லவரே இயேசு வல்லவரே -2 சந்தோஷம் எப்போதுமே -2 கலப்பையின் மேல் கையை வைத்து விட்டேன் நான் பின் திரும்பி பார்க்கவே மாட்டேன் -2