உம் கிருபைக்காய் நன்றி ஐயா
um kirubaikkaay nandri aiyaa
உம் கிருபைக்காய் நன்றி ஐயா உம் தயவிற்காய் நன்றி ஐயா இந்நாள் வரை வழுவாமலே காத்த உம் அன்பிற்காய் நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா
சோதனைகள் என்னை சூழ்ந்திட்ட நேரத்தில் சோராது என்னை நடத்தின கிருபை
பெலவீனங்கள் என்னை வாட்டி நேரத்தில் புது பெலத்தால் என்னை நிரப்பின கிருபை
நான் நம்பினோர் என்னை கை விட்ட நேரத்தில் கரங்களால் என்னை அணைத்திட்ட கிருபை
தனிமையில் நின்று நான் தவித்திட்ட நேரத்தில் தாங்கியே என்னைத் தேற்றின கிருபை