உம் கரத்தால் என்னை தாங்கினீர்
um karathaal ennai thaangineer
உம் கரத்தால் என்னை தாங்கினீர் பாதாளக் குழியில் தூக்கினீர் என் சத்ருக்கள் எழும்பின போதிலும் என் சமாதானம் பெருகினதே
யுத்தம் எழும்பினால் பயமில்லையே கர்த்தர் என்னோடு எந்நாளுமே வெற்றியை தருவார் நிச்சயமே அவர் வார்த்தை என்றும் என் பெலனே-2
அம்புகள் சத்ருவை முறித்ததே சிதறடித்து கலங்கச் செய்தீர் கர்த்தர் என் ஆதரவே விசாலத்தில் என்னை நிறுத்தினீர் _யுத்தம் எழும்பினால்
ஆரோனின் கோல் துளிர்த்ததே என் அழைப்பை உறுதி செய்தீர் என் விளக்கை எரிய செய்தீர் என் இருளை ஒளியாக்கினீர் -யுத்தம் எழும்பினால்