உம் கரம் என்னை
um karam ennai
உம் கரம் என்னை பிடித்ததைய்யா இதுவரை என்னை நடத்துதய்யா-2 கஷ்டத்தின் வேளையில் காத்ததையா தூக்கி அள்ளி எடுத்ததய்யா-2
பல்லவி
இயேசய்யா என்ன அன்பு எனக்காக வந்த அன்பு-2
ஒவ்வொரு நாளும் நித்திரையில் எதிர்காலம் குறித்த சிந்தனையில்-2 என்ன செய்வேன் என்று அழுதேனே எல்லா பயத்திற்கும் விலக்கினீரே-2
காத்தீரே இரட்சித்தீரே உம் பிள்ளையாய் மாற்றினீரே-2
மனிதராலே நெருக்கப்பட்டேன் மனம் நொந்து நான் கண்ணீர் விட்டேன்-2 இனி இந்த வாழ்க்கை தேவை இல்லை தேவா என்னை எடுத்துக்கொள் என்று
காதறினேனே புலம்பினேனே விடவில்லையே உங்க கரம்-2
பல்லவி
இயேசய்யா என்ன அன்பு எனக்காக வந்த அன்பு-2
இயேசய்யா நன்றி ஐயா அளவில்லா உம் அன்பிற்காக-2