உம் கண்கள் என்னை கண்டதைய்யா
um kangal ennai kandadhaiyyaa
உம் கண்கள் என்னை கண்டதைய்யா என் கண்ணீரை துடைத்ததைய்யா உம் காருண்யம் இழுத்ததைய்யா என் வாழ்கையை மாற்றினதைய்யா - 2
நீர் செய்த நன்மைகளை எண்ணியே துதித்திடுவேன் - 2
1. நான் தனிமையில் அழுத போது என் கண்ணீரை கணக்கில் வைத்தீர் நான் தடுமாறி விழுந்த போது என்னை தாங்கியே நிறுத்தினீரே - 2
நீர் தந்த இரட்சிபினால் புது வாழ்வைப் பெற்றுக் கொண்டேன் - 2
2. அவர் சொன்ன வார்த்தை நிறைவேறாத சூழ்நிலை உருவானதே தாழ்மை என்ற நிலை மட்டுமே வாழ்கையில் துணையானதே - 2
நீர் என்னை உயர்தும்படி உம் கரத்துக்குள் அமர்ந்திருப்பேன் - 2