உம் கை என் ஆத்துமாவை
um kai en aathumaavai
உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும் உம் கை என் காரியத்தை வாய்க்க பண்ணும் உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும் உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும்-2
பறந்து காக்கும் பட்சி போல என்னை காக்கும் தேவனே பரந்த நேசம் உள்ள செட்டை கீழே தஞ்சம் கொண்டேனே-2
இயேசுவே....... உம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன் இயேசுவே....... உம்மை விட்டு நானும் யாரை தேடுவேன்-2
மனம் திறந்து உணர்ந்து நான் என்னை உமக்கு தந்தேன் வழி பிறந்து மகிழ்ந்து உம்மை மீண்டும் நெருங்கினேன்-2 உம் சிலுவையை நினைக்க செய்திட்டீர் என் புலம்பலை மறக்க செய்திட்டீர் -பறந்து காக்கும்