உம் கால்கள் போகும் பாதையில்
um kaalgal pogum paadhaiyil
உம் கால்கள் போகும் பாதையில் உம்மோடு கூட வருவேன் உம் கைகள் செய்யும் வேலையில் எப்போதும் கூட இருப்பேன் -2
நீரே எனது கர்த்தர் நீரே கர்த்தாதி கர்த்தர் -2 நீர் என்னை தாங்குவீர் நீர் என்னை ஏந்துவீர் கரம்பிடித்து என்னை நடத்திச் செல்வீர் -2
கல்லான என் மனம் கனியாக மாற என் காயம் ஏற்றது நீரல்லவோ வறண்ட என் வாழ்வில் வளமாக மாற தாகமாய் இருந்தது நீரல்லவோ -2 நீர் என்னை தாங்குவீர் நீர் என்னை ஏந்துவீர் கரம்பிடித்து என்னை நடத்திச் செல்வீர் -2
வெள்ளங்கள் வந்து வாரி போனாலும் உள்ளங்கையில் வரைந்தது நீரல்லவோ எல்லாமே கிழந்து தனியான போதும் கிருபையாய் காத்தது நீரல்லவோ -2 நீர் என்னை தாங்குவீர் நீர் என்னை ஏந்துவீர் கரம்பிடித்து என்னை நடத்திச் செல்வீர் -2
பாதைகள் மறந்து பயணித்தபோது வழிகாட்டி சென்றது நீரல்லவோ உலகிற்கு நற்செய்தி நீர் சொல்லிட பரிஸ் ஒன்றை தந்தது நீரல்லவோ -2 நீர் என்னை தாங்குவீர் நீர் என்னை ஏந்துவீர் கரம்பிடித்து என்னை நடத்திச் செல்வீர் -2