உம் அன்பு போதும் என் அன்பர் இயேசு தேவா
um anbu podhum en anbar yesu devaa
உம் அன்பு போதும் என் அன்பர் இயேசு தேவா உம்மோடு சேர என் உள்ளம் ஏங்குதையா
1. உம்மைப் போல் யாருமில்லை உண்மையாய் நேசித்திட கண்மணி போல் காத்து நடத்த சேற்றினில் வாழ்ந்த என்னைத் தூக்கி நீர் தேற்றினீரே கன்மலையின் மேலே நிறுத்த (உம்)
2. எள்ளளவும் கள்ளமில்லை கடுகளவும் கபடமில்லை திடமனதாய் உம்மை நம்புவேன் சொல்லொண்ணா உந்தன் நேசம் சொல்லாமல் ஜீவிப்பேனோ என் தேச எல்லையெங்குமே (உம்)
3. அழுகையின் பள்ளத்தாக்கின் நடுவே நான் நடந்தபோது நீரூற்றாய் மாற்றி தந்தீரே பெலத்தின் மேல் பெலனடைய சீயோனை வந்தடைய தந்தீரே உந்தன் கிருபை (உம்)
4. மாமிச தேகமுள்ள யாவுக்கும் ஆகாரத்தை ஈந்திடும் எந்தன் இயேசுவே பெருங்கடல் திமிங்கலமும் உம் கரம் நோக்கிடுமே நீர் தர வாங்கிக் கொள்ளுமே (உம்)
5. நித்திய நம்பிக்கையை என்னுள்ளில் வைத்த நேசர் சத்தியம் என்னை மீட்பதே உத்தம உள்ளத்தோடு உம்மைப் பின்பற்றிடவே நித்திய பெலன் தாருமே (உம்)
6. வெள்ளியிலும் பொன்னிலுமல்ல விலையுயர்ந்த வஸ்திலுமல்ல இரத்தத்தால் என்னை மீட்டிரே எந்தன் விசுவாசத்தாலே ஏகிடுவேன் உந்தன் பாதம் ஏற்றிடுவீர் உந்தன் பரத்தில் (உம்)
7. நெருக்கத்தில் கூப்பிட்டேனே உருக்கமாய் ஓடிவந்து திருக்கரம் கொண்டு அணைத்தீர் இடக்கரம் தாங்கும்போது வலக்கரம் அணைத்திடுமே உம் நேசம் என்னை வென்றதே (உம்)