உம் அன்பு மாறாதய்யா
um anbu maaraadhayyaa
உம் அன்பு மாறாதய்யா அது ஒரு நாளும் அழியாதய்யா நேசத்தின் உச்சிதமே உம்மை நினைத்தாலே சந்தோஷமே
1. தினம் உம் தாகத்தால் நீர் ஓடை தேடும் ஒரு மான்போல அலைந்தேனய்யா கன்மலைமேல் உம்மை கண்டேனய்யா என் தாகம் தீர்த்தீரய்யா
2. உந்தன் முகம் காணவே தினம் அதிகாலையில் நான் உமை தேடி வந்தேனய்யா உந்தன் குரல் கேட்டு மகிழ்ந்தேனய்யா உம் மகிமையை கண்டேனய்யா
3. என் பாரங்களும் மனக்கவலைகளும் உம்தோளினில் சுமந்தீரய்யா உள்ளம் ஒரு நாளிலும் குளிராதய்யா உம் அன்பினை துதிப்பேனய்யா
4. உந்தன் மணவாட்டியாய் இந்த பூவில் கண்டீர் தூய உதிரத்தால் மீட்டுக் கொண்டீர் இரட்சிப்பினால் அலங்கரித்தீர் உம் ஆவியால் அபிஷேகித்தீர்