உம் அன்பை இன்று
um anbai indru
உம் அன்பை இன்று நாங்கள் அறிந்திருக்கிறோம், மீட்பு தரும் உம்மை இன்று மறந்திருக்கிறோம், தேவையான நேரங்களில் நாடுகின்றோம், தேவையில்லா சமயங்களில் நாம் ஓடுகின்றோம்.
நான் பாவி என்றாலும், என் தவறை அறிந்தாலும், என்னை உயர்த்த அன்று நீர், தாழ்ந்தீரே, இன்று நான் ஏழை என்றதால், உம் கிருபை வழங்கவே, நீர் ஏழை ஆனீரே, மறவேனோ.
உம் கிருபை எப்போதும் மாறாது, உம் கிருபை எப்போதும் மறவாது, உம் கிருபை எப்போதும் தவறாது, உம் கிருபையே.. உம் கிருபை எப்போதும் மாறாது, உம் கிருபை எப்போதும் மறவாது, என்றென்றும் தொடருவது, உம் கிருபையே.
பாவரோகியான என்னை மாற்றினீர், தீய வழியில் சென்ற என்னை தெரிந்தெடுத்தீர், அறியாமல் பாவங்களில் விழுந்தேன், அறிந்தும் உம் கிருபையால் என்னை சூழ்ந்துகொண்டீர்,
ஒரு அன்பை கண்டதும், அது உண்மை அன்பென்று, நான் நம்பி விழுந்ததும் இருக்கையில், ஆனால் உம் அன்புக்காகவே, நான் அலைந்து திரிந்தேனே, உம் அன்பு என்னோடு, இருந்ததே. .......(உம் கிருபை எப்போதும்)