உள்ளம் உருக்கும் நேசம்
ullam urukkum nesam
உள்ளம் உருக்கும் நேசம் கல்வாரி நேசம் செந்நீர் கலந்து பாயும் குருதி எனக்காகவே
அளவற்ற அந்த அன்பு அளவற்ற அந்த நேசம் அளவற்ற கிருபையே
1. கள்ளம் இல்லாத தூய்மை என்னுள்ளம் நிறைக்கின்றதே கள்ளன் கெஞ்சிட்ட போது கருணை விளங்கிட்டதே
2. மேன்மை எல்லாம் துறந்தார் அடிமை ரூபமானார் விண்ணகம் என்னை உயர்த்தி மண்ணகம் மடிந்திட்டாரே
3. சவுக்கால் அடிக்கப்பட்டார் முள்முடி சுமந்திட்டார் ஆணி துளைத்ததய்யோ எனக்காக எனக்காகவே