உலர்ந்த எலும்புக்கு உயிராவோம்
ularndha elumbukku uyiraavom
உலர்ந்த எலும்புக்கு உயிராவோம் உண்மையாய் இதுவும் நடக்குமோ எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கில் என் தேவன் வார்த்தைகள் நிறைவேறும் சொன்னாரே அவர் செய்திடுவார் சொன்னபடியே நடத்திடுவார்
எழுப்புதல் சத்தம் கேட்குதே எங்கோ அல்ல நம் தேசத்தில் அக்கினி பற்றி பரவுதே தேசங்கள் இயேசுவை பணியதே
பாவிகள் கதறி அழுகின்ற பெருங்குரல் தேசத்தில் தொனிக்குதே கல்வாரி சிலுவையின் அடியினிலே கண்ணீர் வெள்ளங்கள் பெருகுதே
ஸ்தோத்திர துதிகள் உயர்ந்திடும் தேவனின் மகிமை வெளிப்படும் களிப்பும் மகிழ்ச்சியும் பெருகிடும் கர்த்தரின் ராஜ்ஜியம் எழும்பிடும்