உலகோர் உன்னை பகைத்திடும்
ulagor unnai pagaithidum
உலகோர் உன்னை பகைத்திடும் நேரம் திகையாதே மனமே உலகோர் உன்னை வெறுத்திடும் நேரம் கலங்காதே மனமே திகையாதே கலங்காதே நான் உன்னை தாங்கிடுவேன் என்றும் தாங்கி நடத்துவேன்
மலைகள் விலகிடும் பர்வதம் அகன்றிடும் என் கிருபையே சூழ்ந்திடுமே விலகாது காத்திடுமே
தாய் தந்தை மறந்தாலும் நான் உன்னை மறவேனே என் உள்ளங்கையில் வரைந்தேனே விலகாது காத்திடுவேன்