உலகோர் உன்னை பதைத்தாலும்
ulagor unnai padhaithaalum
1. உலகோர் உன்னை பகைத்தாலும் உண்மையாய் அன்பு கூறுவாயா 2 உற்றார் உன்னை வெறுத்தாலும் உந்தன் சிலுவை சுமப்பாயா? 2
உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய்?
2. உலக மேன்மை அற்பம் என்றும் உலக ஆஸ்தி குப்பை என்றும் உள்ளத்தினின்று கூறுவாயா ஊழியம் செய்ய வருவாயா? 2
3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல் மேய்க்கிறார் பாவ புல்வெளியில் மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும் மேன்மையை நாடி ஓடுகின்றாயா 2
4. இயேசு என்றால் என்ன விலை என்றே கேட்டிடும் எத்தனை பேர் பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர் ஜீவ அப்பம் கொடுப்பாயா? 2
5. ஐந்து சகோதரர் அழிகின்றாரே யாரையாவது அனுப்பிடுமே யாரை நான் அனுப்பிடுவேன் யார்தான் போவார் எனக்காக 2
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A Em A D D A G A D D A A Em D D A Em A D D G G A D D A Em A D D G G A D