உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய்
ulagirku oliyaay uyirukku vazhiyaay
உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய் துலங்கிடும் உமக்கே இறைவா நன்றி நன்றி இறைவா நன்றி நன்றி கூறுகின்றோம் ( 2 )
இயேசுவின் குரலை இதயத்தில் கொண்டு இணையில்லா பலியில் இறைவனை உண்டு ( 2 ) சென்றிடும் வழியில் சொல்லிடும் மொழியில் ஆ ( 2 ) நின்றிட அழைத்தோம் நிற்பாய் தினமும்
உண்மை வழியை உலகுக்குக் காட்ட உலகத்தை அன்பால் ஒன்றாயத் திரட்ட ( 2 ) அக இருள் அகற்றி இறையருள் புகுத்த ஆ அன்புடன் அளித்தோம் எம்மையே உமக்கு