உலகின் ஒளியே வாழ்க
ulagin oliyae vaazhga
உலகின் ஒளியே வாழ்க! உயிர்ப்பிக்கும் தேவனே நீர் வாழ்க!! பரிசுத்த ஆவியே வாழ்க!!! பணிந்து போற்றுகிறோம்.
1. மகிமையாய் வெற்றி சிறந்தவரே மாட்சிமை உள்ளவரே உன்னதரே, உயர்ந்தவரே, உண்மையுள்ளவரே – உலகின்
2. சிலுவையில் வெற்றி சிறந்தவரே சிலுவையின் நாயகரே வல்லவரே, நல்லவரே, அன்பு மிகுந்தவரே – உலகின்
3. ஆதியும் அந்தமும் ஆனவரே அதிசயமானவரே அன்பரே, நண்பரே, அற்புதமானவரே – உலகின்
4. சாத்தானின் செயல்களை அழித்தவரே சந்ததம் உள்ளவரே சத்தியரே சகாயரே, சாவாமையுள்ளவரே – உலகின்
5. சீக்கிரம் வருவேன் என்றவரே சீயோனின் அதிபதியே இனியவரே, பெரியவரே, இரக்கமானவரே – உலகின்
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
B D#m G#m E C#m A F# B B G#m C#m F# E B F#7 B B G#m C#m F# E B F#7 B B G#m C#m F# E B F#7 B B G#m C#m F# E B F#7 B B G#m C#m F# E B F#7 B