உலகில் உள்ள மனிதர்
ulagil ulla manidhar
உலகில் உள்ள மனிதர் அன்பெல்லாம் நிலையில்லாத அன்பு வாழ்க்கையே -2 கல்வாரி இயேசுவின் அன்பு அது (தாய் காட்டும் அன்புக்கு மேலே ) -2
1. சொந்த பந்தம் காட்டும் அன்பெல்லாம் உனக்கு சொத்துசுகம் இருக்கும் வரைக்கும்தான் -2 நண்பர் காட்டும் அன்பு எல்லாம் குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான்-2
2. கணவர் காட்டும் அன்பு எல்லாம் மனைவிக்கு இளமைப்பருவம் இருக்கும் வரைக்கும்தான் -2 மனைவி காட்டும் அன்பு என்பதோ குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான்-2
3. தாய் காட்டும் அன்பு எல்லாம் நீ கல்லறைக்குப் போகும் வரைக்கும் தான் -2 தேவன் காட்டும் அன்பு என்பதோ நித்தியகால பேரின்பமே -2