உலகமெல்லாம் எனக்காதாயம்
ulagamellaam enakkaadhaayam
உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை – 2
அழியும் செல்வம் சேர்ப்பதா அழியா ஆன்மாவைக் காப்பதா – 2
இந்த கேள்விக்குப் பதிலாய் வாழ்ந்தவர் யார் அவரே புனித இயேசுவாம்
பொன்னும் பொருளும் தேடுகிறோம் பட்டம் பதவியை நாடுகிறோம் – 2 எதுவும் நிறைவு தருவதில்லை எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லா ஆன்மாதான் – 2
அறிவும் திறனும் அமைவதில்லை உறவும் நட்பும் தொடர்வதில்லை – 2 தேடும் எதுவும் கிடைப்பதில்லை கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லா ஆன்மாதான் – 2