உலகம் மாறி போகலாம்
ulagam maari pogalaam
உலகம் மாறி போகலாம் நம்பினோர் மாறி போகலாம் உம் அன்பு மாறாதே
தாயின் அன்பும் மாறலாம் தந்தையின் அன்பும் மாறலாம் உம் அன்பு மாறாதே
இயேசுவே இயேசுவே உம் அன்பு மாறாதே இயேசுவே இயேசுவே உம் அன்பு போதுமே
தோல்விகள் என்னை சூழலாம் கஷ்டங்கள் என்னை நெருக்கலாம் உம் அன்பு தாங்குமே வேதனை வந்து சேரலாம் சோதனை வந்து சேரலாம் உம் அன்பு தாங்குமே
உற்றார் என்னை வெறுக்கலாம் நன்பனும் என்னை வெறுக்கலாம் உம் அன்பு போதுமே பிள்ளையின் அன்பும் மாறலாம் நேசித்தோர் அன்பும் மாறலாம் உம் அன்பு மாறாதே