உதவினீரே என்னை உயர்த்தினீரே
udhavineerae ennai uyarthineerae
உதவினீரே என்னை உயர்த்தினீரே உதவாத என்னையுமே-2 மன்னித்தீரே என்னை மகிழ வைத்தீரே மனதார நன்றி சொல்கிறேன்-2
நன்றி நன்றி நன்றி அளவில்லா நன்மை செய்தீர் நன்றி நன்றி நன்றி என் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி
1.வழி தெரியாமல் நான் தடுமாறினேன் வழிகாட்டியாய் வழி நடத்தினீர்-2 என் வழியே என் ஒளியே என் இயேசுவே என் நேசரே-2-நன்றி நன்றி
2.(நான்) விழுந்தபோதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தினீர் மூச்சாக என்னோடு இருப்பவரே-2 என் மூச்சே என் பேச்சே என் இயேசுவே என் நேசரே-2-நன்றி நன்றி
3.என்றோ நான் மரித்திருப்பேன் உம் கிருபையினாலே என்னை மறைத்தவரே-2 என் உறவே என் மறைவே என் இயேசுவே என் நேசரே-2-நன்றி நன்றி