துரோகங்கள் சூழ்ந்திருக்கையில்
thurogangal soozhndhirukkaiyil
துரோகங்கள் சூழ்ந்திருக்கையில் என்னை காத்தவர் நீர்தானையா கண்ணீர் என் கண் மறைக்கையில் கரம் பிடித்தவர் நீர்தானையா
நான் உடைந்தபோதெலாம் என்னை உருவாக்கினீர் நான் சோர்ந்தபோதெலாம் என்னை பெலப்படுத்தினீர் உம்மை ஆராதிப்பேன் - 4
சிங்கங்கள் சூழ்ந்திருக்கையில் பாதுகாத்தவர் நீர்தானையா நான் ஜெபித்த போதெல்லாம் என் கேடகமானீரே கிருபையை தந்தென்னை பிழைக்க செய்தீரே உம்மை ஆராதிப்பேன் -4
வாதைகள் சூழ்ந்திருக்கையில் வாழ வைத்தவர் நீர்தானையா பாதம் நழுவிய போதும் சற்றே தப்புவித்தீர் பிராண சேதமின்றி புதுவாழ்வை எனக்களித்தீர் உம்மை ஆராதிப்பேன் - 4