துன்மார்க்கரின் ஆலோசனையில்
thunmaarkkarin aalosanaiyil
துன்மார்க்கரின் ஆலோசனையில் நடவாதே பாவிதன் வழிதனில் நில்லாதே -2 பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராதே - நீ இரட்சிக்கப்பட்ட தேவ மனுஷன் நீ..... இரட்சிக்கப்பட்ட தேவ மனுஷன்
கர்த்தரின் வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் தியானிப்பவன் பாக்கியவான் -2 அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு தன் காலத்தில் தன் கனியைத் தருவான் -2 தன் காலத்தில் கனியைத் தருவான்
நீதிமான் இலை உதிர மரம் போல் இருப்பான் அவன் செய்வது எல்லாமே வாய்க்கும் -2 துன்மார்க்கர் அப்படியே இராமல் காற்று பறக்கடிக்கும் பதரை போல் அஆவாரே -2 காற்று பறக்கடிக்கும் பதரை போல் அஆவாரே
நியாயத்தீர்ப்பில் துன்மார்க்கரும் நீதிமான்கள் சபையில் பாவிகள் நிலை நிற்பதில்லை -2 துன்மார்க்கர் வழிய அழிந்தே போகும் நீதிமான் வழியை கர்த்தர் அறிவார் -2 நீதிமான் வழியை கர்த்தர் அறிவார்