துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
thunbathin naduvil nadandhaalum
துன்பத்தின் நடுவில் நடந்தாலும் போராட்டம் கஸ்டம் நிறைந்தாலும் அஞ்சிடேன் அஞ்சிடேன் நல் நாதர் வழியில் பின் செல்வேன் - 2
நிந்தைகள் குறைகள் மிகுந்தாலும் நண்பர்கள் பகையாய் மாறினாலும் கலங்கிடேன் கலங்கிடேன் நல் நாதர் வழியில் பின் செல்வேன் - 2
வேதனை சோதனை சூழ்ந்திடும் நோவுகள் கஷ்டங்கள் வந்தாலும் சோர்ந்திடேன் சோர்ந்திடேன் நல் நாதர் வழியில் பின் செல்வேன் - 2
துன்பங்கள் துயரங்கள் தோன்றினாலும் செல்வங்கள் சிறப்பு இழந்தாலும் அழிந்திடேன் அழிந்திடேன் நல் நாதர் வழியில் பின் செல்வேன் - 2
தனிமை வெறுமை வாட்டினாலும் அற்பமாய் எண்ணி தள்ளினாலும் விழுந்திடேன் விழுந்திடேன் நல் நாதர் வழியில் பின் செல்வேன் - 2