துன்பத்தை கண்டு துயராதே
thunbathai kandu thuyaraadhae
துன்பத்தை கண்டு துயராதே வருஷத்தை கண்டு வருந்தாதே இன்ப துன்ப நேரத்திலும் கர்த்தர் உன்னை கைவிடாரே
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு கர்த்தர் உன்னை கைவிடாரே-2
1.மாரவை கண்டு கலங்காதே மதுரத்தை உனக்கு தருவாரே-2 கண்ணீரின் பாதையில் நடந்தாலும் களிப்பாய் உன்னை மாற்றுவாரே-2
2.அக்கினி கண்டு பயப்படாதே தூதனை அனுப்பி காப்பாரே 2 ஆபத்து வந்த காலத்திலும் கர்த்தர் உன்னை விடுவிப்பாரே-2
3.வழிகள் என்றும் இருளானதோ வெளிச்சத்தை உனக்கு தருவாரே 2 வறுமை வந்த நேரத்திலும் வளமாய் உன்னை நடத்துவாரே-2