துக்கம் எல்லாம் மாற்றிடுவார்
thukkam ellaam maatriduvaar
துக்கம் எல்லாம் மாற்றிடுவார் துயரமெல்லாம் மாற்றிடுவார் வியாதி எல்லாம் மாற்றிவிடுவார் தோல்வி எல்லாம் மாற்றி விடுவார்
மாற்றுவார் இயேசு மாற்றுவார் மாறிடும் எல்லாம் மாறிடும்
1.துன்பம் கண்ட நாட்களுக்கு மேலாக உன்னை மகிழ்ச்சியாக்குவார் இழந்துபோன நன்மையெல்லாம் இரட்டிப்பாக தந்திடுவார்
2.எல்லாம் எதிராய் இருந்தாலும் சூழ்நிலைகள் மாறினாலும் தோற்றுப்போன இடங்களெல்லாம் ஜெயத்தை தந்து நடத்திடுவார்
3. மனிதரெல்லாம் கைவிட்டாலும் முடிந்துபோன வாழ்க்கையானாலும் குனிந்து நடந்த இடங்களெல்லாம் நிமிர்ந்து நிற்க செய்திடுவார்