துதியுங்கள் தேவனை
thudhiyungal devanai
துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை -2
1. அவரது அதிசயங்களை பாடி -2 அவர் நாமத்தை பாராட்டி, அவரையே ஆண்டவர் என்றறிந்து அவரையே போற்றுங்கள் - 2
ஆபிரகாமின் தேவனை ஈசாக்கின் தேவனை ஆர்ப்பரித்து வணங்குங்கள்
2. இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை -2 இடையூற்றினைப் போக்கினோனே கானானின் தேசத்தைக் காட்டினாரே கர்த்தரை போற்றுங்கள் -2
ராஜாதி ராஜனை கர்த்தாதி கர்த்தனை ஆர்ப்பரித்து வணங்குங்கள்
3. வானங்களில் எல்லாம் உள்ளவைகளே - 2 நாம் கர்த்தரை துதியுங்கள் பூலோகத்தில் அவர் நாமத்தையே என்றென்றும் துதியுங்கள் -2
அக்கினியே கல்மழையை கீழ்ப்படியும் பெருங்காற்று ஆர்ப்பரித்து வணங்குங்கள்
4. எக்காள தொனியோடே அவர் நாமத்தை -2 எந்த காலமும் ஸ்தோத்தரிப்போம் வீணையோடும் சுரமண்டலத்தோடும் விண்ணோரைத் துதியுங்கள் -2
தம்புரோடும் தாளத்தோடும் யாழோடும் குழலோடும் ஆர்ப்பரித்து வணங்குங்கள்